தமிழ்நாடு இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது - தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதம்

0 MINNALKALVISEITHI

தமிழ்நாடு இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு!

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா...

அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!

இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!

2030-ஆம் ஆண்டுக்குள் One Trillion Dollar பொருளாதாரம் என்ற போது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு. எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

Tamil Nadu's Dravidian Model Government stands tall as the only State in India to achieve double-digit economic growth!

We proudly declared that Tamil Nadu led the nation with a growth rate of 9.69%.

Now, that too has been surpassed. As per the revised estimates of the Union Government, Tamil Nadu has recorded a staggering growth rate of 11.19% the highest in the country!

The last time we touched double-digit growth was in 2010-11, under the leadership of Kalaignar. Today, the Dravidian Model Government, walking the

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.