தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம் : தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வாழ்த்து மற்றும் ரூ.22.60 கோடிக்கான காசோலை

0 MINNALKALVISEITHI

தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் சிறந்த செயல்பாட்டிற்காக தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்து

கள்ளக்குறிச்சி-2 மற்றும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இலாப பங்கீட்டு ஈவுத்தொகை ரூ.22.60 கோடிக்கான காசோலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று, கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர். சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு இவ்வரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சர்க்கரை பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் சர்க்கரை ஆலைகள் நலிவடைந்த நிலையிலிருந்து மீண்டு வருகின்றன.

புதுடெல்லியில் செயல்பட்டுவரும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனம், ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை தேர்வு செய்து, விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் 2023-24 அரவைப் பருவத்தில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒட்டுமொத்த செயல்திறனுக்கான முதல் பரிசிற்கான விருதும், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அபிவிருத்திக்கான இரண்டாம் பரிசிற்கான விருதும், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி மேலாண்மைக்கான இரண்டாம் பரிசிற்கான விருதும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி மேலாண்மைக்கான மூன்றாம் பரிசிற்கான விருதும், செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தொழில்நுட்ப செயல்பாடுக்கான மூன்றாம் பரிசிற்கான விருதும். என ஐந்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விருதுகள் மற்றும் சான்றுகள் பெற்று சாதனை படைத்துள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இவ்விருதுகளை மாண்புமிகு சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மேலும், அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை 2017-18 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் பங்குத் தொகைக்கு வழங்க வேண்டிய இலாப பங்கீட்டு ஈவுத்தொகையான 10.23 கோடி ரூபாயும் மற்றும் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை 2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டுகள் வரையிலான தமிழ்நாடு அரசின் பங்குத் தொகைக்கு வழங்க வேண்டிய இலாப பங்கீட்டு ஈவுத்தொகையான 12.37 கோடி ரூபாயும். என மொத்தம் 22.60 கோடி காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார். ரூபாய்க்கான அவர்களிடம் அமைச்சர்

இந்நிகழ்வில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப. வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு. খ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சர்க்கரைத்துறை இயக்குநர் திரு. த. அன்பழகன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.