தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், 2025-26 ஆண்டு மானியக் கோரிக்கை எண்:26இன் விவாதத்தின் போது, மாண்புமிகு வீட்டு வசதி துறை அமைச்சர் அவர்கள் 07.04.2025 அன்று கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்
"தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 31.03.2015-க்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு,
மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்குண்டான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
இச்சலுகை 31.03.2026 வரை செயல்படுத்தப்படும். இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் ஒதுக்கீடுதாரர்கள் விரைவாக விற்பனைப்பத்திரம் பெற்றுக்கொள்ள இயலும்."
2. மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் மேலே 8-இல் படிக்கப்பட்ட கருத்துருவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
> 14.02.2011 முதல் செயல்படுத்தப்படும் வட்டித் தள்ளுபடி திட்டம், பல்வேறு நேர்வுகளின் மூலம் இதுநாள் வரை ஆறு முறை கால அவகாசம் அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வட்டித் தள்ளுபடி திட்டத்தின் கீழ் இதுநாள் வரை பயனடைந்த மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை 40,687 ஆகும்.
> தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் வீடு / மனை /குடியிருப்பு ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களில் 31.03.2025 வரை விற்பனைப் பத்திரம் பெறாமல் உள்ளவர்களின் எண்ணிக்கை 14,126 ஆகும். இதில் மாத தவணை முடிவுற்று வட்டிச் சுமையினால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளவர்களின் எண்ணிக்கை 8204 ஆகும். இவ்வட்டித் தள்ளுபடி திட்டத்தினை அனைத்து ஒதுக்கீடுதாரர்களும் பயன்படுத்தி விற்பனைப் பத்திரம் பெறுவதன் மூலம் ரூ.164.56 கோடிகள் வாரியத்திற்கு வருவாயும், ரூ.50.60 கோடி ஒதுக்கீட்டாளர்களுக்கு வட்டி தள்ளுபடியும் ஏற்படும்.
எனவே, 2025 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற வரவுசெலவு கூட்டத் தொடரில் மாண்புமிகு வீட்டு வசதி அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் வீடு / மனை / குடியிருப்பு ஆகிய அலகுகளில் ஒதுக்கீடு பெற்று. 31.03.2015க்கு முன்பு தவணை காலம் முடிவுற்றவர்களில் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை தாமாக முன்வந்து முழுவதும் செலுத்தும் பயனாளிகளுக்கு பின்வரும் நேர்வுகளுக்குட்பட்டு 31.03.2026 வரை வட்டி தள்ளுபடி வழங்கலாம் என மேலாண்மை இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாதத் தவணை தொகையை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி
வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி.
நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்திற்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாதத்திற்குண்டான வட்டி தள்ளுபடி
3. மேலே பத்தி 2-இல் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது சீரிய பரிசீலனைக்கு பின் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் 07.04.2025 அறிவிக்கப்பட்ட வட்டிச் சலுகை திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில் வீடு / மனை / குடியிருப்பு ஆகிய அலகுகளில் 31.03.2015-க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தாமாக முன்வந்து தபியம் முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு 1 மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியினை முழுவதுமாக தள்ளுபடி செய்தும், 2. வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும் மற்றும் 3. நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இனங்களில் விரைவாக விற்பனை பத்திரம் பெற வட்டித் தள்ளுபடி சலுகையினை 31.03.2026 வரை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.
4. இவ்வாணை நிதித் துறையின் அலுவலக குறிப்பு எண்.18 முதல் 20 வரையிலான நிதித் (உள் கட்டமைப்பு-III) துறையின் 05.07.2025 அன்று பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
காகர்லா உஷா
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
