இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் 2025 - 2026 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி - மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும். 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் /பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியான நபர்களிடமிருந்து (ஒவ்வொரு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள்) வரவேற்கப்படுகின்றன.
பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org" என்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET-UG) 2025-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.thayushselection.org. என்ற வலைதளங்களில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம். விண்ணப்பிக்கும்முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
படிப்புப் பிரிவு: பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ்
படிப்பிற்கான காலம் 5 ஆண்டுகள்
படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி):
கல்லூரிகளின் விவரங்கள்:
அரசு சித்தா மருத்துவக் கல்லூரிகள்-02 இருக்கைகள்-160.
அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி-01, இருக்கைகள்-60.
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி-01-இருக்கைகள்-60.
அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி-01-இருக்கைகள்-50.
சுயநிதி சித்தா மருத்துவக் கல்லூரிகள்-13, இருக்கைகள்-820,
அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரிகள்-05, இருக்கைகள்-270.
அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்-11-இருக்கைகள்-820,
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் ஒதுக்கீட்டு விவரங்கள்: அரசு ஒதுக்கீடு, அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு.
இணையவழி விண்ணப்பக் கட்டணம்:
அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம்,
சென்னை-600 106 என்ற முகவரிக்கு 08.08.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்தல் / வந்து சேர வேண்டும்.
அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும்.
பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் /
பி.எச்.எம்.எஸ்
பட்டப்படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான விவரங்களுக்கு உரிய தகவல் தொகுப்பேட்டினைப் பார்க்கவும்.
