தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் மாநில அமர்வுகளில் தொழில்நுட்ப உறுப்பினர்கள் (மாநிலம்), பதவிக்கான தேர்வு

0 MINNALKALVISEITHI

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் மாநில அமர்வுகளில் தொழில்நுட்ப உறுப்பினர்கள் (மாநிலம்), பதவிக்கான தேர்வு.

தமிழ்நாட்டில் அமையவுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாய மாநில அமர்வுகளில் தொழில்நுட்ப உறுப்பினர்கள் (மாநிலம்) பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை வரவேற்கிறது. மாநிலத்திற்காக இரண்டு (02) மாநில அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை சென்னை, மதுரை மற்றும் கூடுதல் அமர்வாக கோயம்புத்தூரில் செயல்படவுள்ளன.

2. பதவி மற்றும் தகுதி பற்றிய விவரங்கள் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன:



3. விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 50 (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி) மற்றும் அதிகபட்சமாக 67 வயது வரை இப்பதவியை வகிக்கலாம். மாத ஊதியம் ரூ.2,25,000/- (நிலையானது), ஏனைய படிகள் மற்றும் பிற பணி விதிமுறைகள் மற்றும் வரையறைகளை (அகவிலைப்படி, மருத்துவம் போன்றவை) பொறுத்த வரையில் அதே ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர்களுக்கான (தற்போது ஊதிய நிலை 17 இல் உள்ள அலுவலர்) சலுகைகள் மற்றும் விதிமுறைகள் இவர்களுக்கும் பொருந்தும்.

4. தேவையான தகுதி மற்றும் பிற விவரங்கள், தமிழ்நாடு அரசு வலைதளம் (https://www.tn.gov.in/) மற்றும் தமிழ்நாடு வணிகவரித் துறை வலைதளம் (https://tnvat.tn.gov.in/ctdportal/menus/citizen_corner/announ cement.jsp) ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் (https://gstn.org.in/gstat-state-application/#/home) 6 GSTN இணையத்தில் 01.07.2025 தேதி முதல் 14.08.2025 அன்று மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள நபர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்து, அவர்களின் தகுதி மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு ஏற்ப இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

5. விண்ணப்பதாரர்களின் தகுதிகள் மற்றும் தொடர்புடைய பணி அனுபவத்தைப் பொறுத்து, பெறப்பட்ட விண்ணப்பங்களை தேடல்-மற்றும்-தேர்வுக் குழு (Search-Cum-Selection Committee) பரிசீலிக்கும். ஏற்புடைய நேர்வில், பட்டியலிடப்பட்ட (shortlisted) விண்ணப்பதாரர்கள் குழுவால் நேர்முக கலந்துரையாடலுக்கு அழைக்கப்படலாம். ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஒரு பதவிக்கு, தகுதியான இரண்டு நபர்களின் பெயர் பட்டியலை, நியமனம் செய்யும் பொருட்டு மத்திய அரசுக்கு குழு பரிந்துரைக்கும்.

6. தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் மேலே குறிப்பிடப்பட்ட வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.

செயலாளர்

வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை மற்றும் உறுப்பினர் செயலர். தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தொழில்நுட்ப உறுப்பினர் (மாநிலம்) பதவிக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழு, தமிழ்நாடு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.