சென்னையில் நடைபெறவுள்ள தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை

0 MINNALKALVISEITHI

சென்னையில் நடைபெறவுள்ள தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை

ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள நுகர்வோர் விவகாரங்கள் துறை, தென் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கான (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள்) நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை, சென்னை ஆலந்தூரில் உள்ள ஹோட்டல் லீ ராயல் மெரிடியனில் (Hotel Le Royal Meridien)13.06.2025 அன்று பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தப் கருத்துப்பட்டறையில், நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தென்னிந்திய முதன்மைச் செயலாளர்கள், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர்கள்/உறுப்பினர்கள். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர்கள்/உறுப்பினர்கள் மற்றும் தென் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்கள்/உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கருத்துப்பட்டறையின் நோக்கமாகும். நுகர்வோர் நீதியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப தளமான இ-ஜாக்ரிதி வாயிலாக வீடு மனை விற்பனை குறை தீர்க்கும் முறை, காப்பீட்டுத் துறை குறை தீர்க்கும் முறை, மருத்துவ அலட்சியம் குறித்து குறை தீர்க்கும் முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்த விரிவான விவாதங்கள் இதில் அடங்கும். மேலும், தொழில், வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான அனைத்து வகையான ஆய்வு, சட்டமுறை எடையளவு மற்றும் தர மதிப்பீடு ஆகியவை குறித்தும் தேசிய ஆய்வு இல்லத்தின் தொழில்நுட்பக் குழு ஆலோசனை வழங்க உள்ளது.

இந்த கருத்துப்பட்டறையின் தொடக்க அமர்வு பிற்பகல் 03:00 மணிக்கு நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத் துறைச் செயலாளர் திருமதி நிதி காரே, இ.ஆ.ப. தலைமை தாங்குவார். தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரதா சாஹூ, இ.ஆ.ப. அவர்கள் முன்னிலை உரையாற்றுவார். இந்திய அரசின் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். நன்றியுரையை ஒன்றிய அரசு நுகர்வோர் விவகாரத் துறை இணைச் செயலாளர் ஸ்ரீ அனுப்பம் மிஸ்ரா இ.பொ.ப., அவர்கள் வழங்கவுள்ளார்.

இந்த கருத்துப்பட்டறை. பங்குதாரர்களிடையே அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு தளத்தை உருவாக்குவதோடு, தென் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வலுவான நுகர்வோர் பாதுகாப்பிற்கான சூழலை உறுதி செய்யும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.