தமிழ்நாட்டில் "மா" விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் "மா" விளைச்சல் அதிகரித்து உள்ளதால். விவசாயிகளின் நலனைக் காத்திட போதிய சந்தைத் தேவையினை ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், அதற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது என்பதை குறிப்பிட்டு. தமிழ்நாட்டில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் "மா" சாகுபடி செய்யப்பட்டு அதில் 9.49 இலட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி அடையப்பட்டு பழப்பயிர் சாகுபடியில் தமிழ்நாடு "மா" உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு "மா" மகசூல் அதிகரித்துள்ளதாலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களின் கொள்முதல் குறைவால், மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5-க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும். இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வது அல்லது மரத்திலேயே பழுக்க விட்டுவிடுவதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் தனியாரால் நடத்தப்படுவதாலும், தென் மாநிலங்களில் மாம்பழக்கூழ் அதிக அளவில் கிடைப்பதாலும், விவசாயிகள் நியாயமான விலையைப் பெற முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டிலிருந்து மாம்பழங்களை வழக்கமாக கொள்முதல் செய்யும் கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வணிகர்களும் மாம்பழங்களை கொள்முதல் செய்வதைத் தவிர்த்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மாங்கனி விலையில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தைப் போக்கிட "זומן" அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது இத்தருணத்தில் மிகவும் அவசியம் என்பதால், இதில் ஒன்றிய அரசு தலையிட்டு, ஒன்றிய அரசின் சந்தைத் தலையீட்டுத் திட்டத்தில் (Market Intervention Scheme) தற்போது உள்ள மாங்கனி விற்பனை விலைக்கும் சந்தைத் தலையீட்டு விலைக்கும் (MIP) உள்ள வித்தியாசத்தை நேரடியாக விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், "மா" விவசாயிகள் குறைந்தபட்சம் சாகுபடி செலவைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், நியாயமான விலையில் கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்க மத்திய கொள்முதல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, மாங்கனி வர்த்தகத்தில் "மா" விவசாயிகள் மற்றும் மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே நிலவும் அச்சத்தினை போக்கி இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலாவதாக, மாம்பழச் சாற்றில் உள்ள பழக் கூழின் உள்ளடக்கம். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், குறைந்தபட்ச அளவு மாம்பழக் கூழ் இருக்க வேண்டும் என்பதை மாம்பழச்சாறு பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. எனவே, பானங்களில் பழக் கூழைக் கலப்பதில் மாம்பழச்சாறு பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் FSSAI தரநிலைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய பொருத்தமான வழிமுறைகளை வெளியிடுமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டாவதாக, மாம்பழக்கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாக உள்ளதால் நிறுவனங்கள் அதிக அளவில் மாம்பழக்கூழ் தயாரித்திட ஆர்வமில்லாமல் உள்ளனர். எனவே, மாம்பழக் கூழுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்றும், இது தற்போதைய துயரச் சூழ்நிலையைச் சமாளிக்க ஒரு குறிப்பிடத்தக்க படியாக மட்டுமல்லாமல், நமது விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு நிரந்தர ஏற்பாடாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மாம்பழம் உற்பத்தி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இதில் தலையிட்டு உரிய அறிவுறுத்தல் வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர்கள் எழுதியுள்ள மாண்புமிகு கடிதத்தில்