எளிமை ஆளுகை - காவல் துறையால் குணநலன் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் குறித்த சரிபார்ப்பு
எளிமை ஆளுகைத் திட்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அரசாணை (நிலை) எண்.509, உள்(காவல்-XIII) துறை, நாள் 06.09.2024 இல் உள்ள குணநலன் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்களைச் சரிபார்ப்பதற்கான நடைமுறை, பின்வரும் நெறிமுறையைப் பின்பற்றும்.
புதுப்பிக்கப்பட்ட சரிபார்ப்புச் செயல்முறை இப்போது காவல்துறை வலைவாசல் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம் (TNSCRB) https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/NewRegister அணுகலாம். இந்த ஒருங்கிணைந்த தளம், குணநலன் சரிபார்ப்பைப் பெறுவதற்கான திறமையான. பதிலளிக்கக்கூடிய மற்றும் குடிமக்கள் எளிதில் அணுகத்தக்க அமைப்பு முறைக்கு வகைசெய்கிறது.
அதற்கிணங்க, இந்த நோக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தற்போதைய நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட்டு அது செயலுக்கு வருகிறது. மேலும் குணநலன் மற்றும் முந்தைய பழக்கவழக்கங்கள் சரிபார்ப்பு குறித்த விவரங்கள் தேவைப்படும் நபர்கள் மேற்கண்ட வலைவாசலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை