வேலூர் சுற்றுப் பயணம்: இன்று (25.6.2025) வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

0 MINNALKALVISEITHI
வேலூர் சுற்றுப் பயணம்: இன்று (25.6.2025) வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது இன்று (25.6.2025) வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி திருமதி. பொற்செல்வி என்பவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.6.2025) வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.

அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் திருமதி.பொற்செல்வி வழங்கிய கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும், தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்து தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரி இன்று காலை விண்ணப்பம் மனு அளித்தார்

திருமதி பொற்செல்வி அவர்களின் ஏழ்மை நிலையை பரிவோடு கருதி, அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருமதி.பொற்செல்விக்கு ரூபாய் 17.000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், பண நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சியோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வணங்கி நன்றி தெரிவித்தார்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.