07.05.2025 அன்று தொடங்கப்பட்ட 2025-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கை விண்ணப்பப்பதிவிற்கான தரவரிசை பட்டியலை இன்று (27.06.2025) மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் வெளியிட்டார்
இன்று (27.06.2025) சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் 2025-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியலினை வெளியிட்டார். இந்நிகழ்வின் போது உயர்கல்வித் துறை செயலாளர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி ஆணையர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்பப்பதிவு செய்த மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 3,02,374, அதில் பதிவுக்கட்டணம் செலுத்திய மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,50.298. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 40.645 (19.4%) கூடுதலாகும். இந்த ஆண்டு தரவரிசை எண் வழங்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,41,641. எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 41,773 (20.9%) கூடுதலாகும். இந்த
இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 51,004 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். இதில் பள்ளிகல்வித் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15.149 (47.01%) கூடுதலாகும்.
இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 5,885 மாணாக்கர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அவர்களின் விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2,446 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 1,361 மாணாக்கர்களுக்கும். மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் 473 மாணாக்கர்களுக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. 200-5. 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 144. இது கடந்த ஆண்டை விட 79 கூடுதலாகும். அதில் தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்கள் 139 இது கடந்த ஆண்டை விட 81 கூடுதலாகும் மற்றும் மற்ற தேர்வு வாரியத்தின் கீழ் படித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 05.
மாணாக்கர்கள் தங்களது தரவரிசை எண்ணை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணாக்கர்கள் விண்ணப்பித்திருந்து, தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ, இன்று முதல் 5 நாட்களுக்குள் (02.07.2025-க்குள்) தங்கள் அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்தினை (TFC's) அணுகி தங்கள் குறைகளை பதிவு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீதத்திற்கு கோராமல் விடுபட்ட மாணாக்கர்களும் தங்களுக்கு அருகாமையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று இணைத்துக்கொள்ளலாம். 02.07.2025-தங்களது பெயரை
மாணாக்கர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள தொழில் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மைய 1800-425-0110 என்ற எண்னை தொடர்பு கொள்ளலாம். இதுவரையில் 28,559 மாணாக்கர்கள் அழைப்பு மையத்தினை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். 8,037 மாணாக்கர்கள் theacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 1.564 மாணாக்கர்கள் நேரடியாகவும் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
மேலும், சிறப்பு பிரிவினற்கான கலந்தாய்வு 07.07.2025 முதல் 11.07.2025 வரையும், பொது பிரிவினற்கான கலந்தாய்வு 14.07.2025 முதல் 19.08.2025 வரையும் மற்றும் துணை கலந்தாய்வு (Supplementary Counselling) 21.08.2025 முதல் 23.08.2025 வரையும் நடைபெறும்.
இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.