இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையம் - சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை

0 MINNALKALVISEITHI
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையம் - சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையம், திருநெல்வேலி ஆலோசனையின்படி, மாவட்டம் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம், அலகு 2, அத்திப்பட்டு ஆகிய இடங்களில் இன்று (09.05.2025) பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் போது விமான தாக்குதலை எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒத்திகை போது பாதுகாப்பு, வெளியேற்றம் மற்றும் முதலுதவி மேற்கொள்ளப்பட்டது. தொடர்பான பயிற்சியும்

மாநில அவசரகால செயல்பாட்டு மையம், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம். கூடங்குளம் அணுமின் நிலையம். மற்றும் வடசென்னை அனல்மின் நிலையம் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பயிற்சிகள் கண்காணிப்பட்டது. மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை. மற்றும் மருத்துவக்குழுக்கள் இந்த மாதிரிப் பயிற்சியில் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நாளை 10.05.2025 அன்று சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை, வ. ஊ. சிதம்பரனார் துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம், தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இடங்களில் மாலை 04.00 மணியளவில் நடக்க உள்ளது. இந்த பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

இந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய இடங்களில் ஆயத்த நிலையினை சரிபார்த்துக் கொள்வதற்கான ஒரு ஒத்திகை மட்டுமே ஆகும். மற்ற இடங்களில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும். இப்பயிற்சி குறித்து பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.