5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகை

0 MINNALKALVISEITHI

முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.5.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஹஜ் மானியமாக 5,650 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் மானியத் தொகை வழங்கிடும் அடையாளமாக, 10 பயனாளிகளுக்கு ஹஜ் மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

2024-25-ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, முதல் முறையாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஹஜ் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால், 14 கோடியே 12 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25,000/- வீதம் 5,650 பயனாளிகளுக்கு இம்மானியத் தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 10 பயனாளிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று தலா ரூ.25,000/-க்கான காசோலைகளை ஹஜ் மானியத் தொகையாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ப. அப்துல் சமது, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர். சா. விஜயராஜ் குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.