கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் பணியமர்த்தப்பட்ட உதவி விற்பனையாளர்களுக்கு
பயிற்சி முகாம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பணி ஆணை வழங்கப்பட்ட
166 உதவி விற்பனையாளர்களுக்கு சிறப்புவாய்ந்த வணிக ஆலோசனை நிறுவனத்தின் மூலம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாண்புமிகு கைத்தறி
மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர்.காந்தி அவர்கள் காலை 12.30 மணி அளவில்
பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்கள்.
இந்த பயிற்சி முகாம் 4.4.2025 மற்றும்
5.4.2025 இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சி முகாமில் உதவி
விற்பனையாளர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை பற்றியும் கோ-ஆப்டெக்ஸில் விற்பனை
செய்யப்படும் கைத்தறி இரகங்களை பற்றியும் விற்பனையை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள்
கைத்தறி பொருட்கள் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் விற்பனை நிலையங்களில்
காட்சிப்படுத்துதல் பற்றி வணிக ஆலோசனை நிறுவனத்தின் மூலம் விரிவாக
விளக்கப்படவுள்ளது. மேலும் இந்த உதவி விற்பனையாளர்களை இரண்டு நாட்களிலும்
சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நேரில் அழைத்து சென்று நேரடி
விற்பனை பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன்.
துணிநூல் மற்றும் காதி துறையின் செயலாளர் திருமதி வே.அமுதவல்லி. இ.ஆ.ப., கைத்தறி
துறை இயக்குநர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப. மற்றும் கோ-ஆப்டெக்ஸ்
மேலாண்மை இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் மற்றும் உயர் அதிகாரிகள்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.