வரும் 7.04.2025 முதல் 11 .05.2025 தேதி வரை தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

0 MINNALKALVISEITHI

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 7.04.2025 முதல் 11 .05.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5..00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை, கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate), ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான், தங்கம் 999% 916% 85% 80% 75% தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை இரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள். மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள். கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்..

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

முன்பதிவு அவசியம்: www.editn.in.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.