22.04.2025 முதல் 24.04.2025 வரை - தொழில்முனைவோர் - சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி

0 MINNALKALVISEITHI

தொழில்முனைவோர் - சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் "சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்' தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.

"சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம். சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றும் விதிகள்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் பெண்/திருநங்கைகள்)18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளது. கைபேசி எண்கள்

தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.

9543773337/9360221280

முன்பதிவு அவசியம்

பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Tags

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.