மேற்கு வங்கத்தின் 217 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் 12 வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் விரிவான பயிற்சி திட்டமானது IIIDEM-ல் துவங்குகிறது.
ஊடகம். சமூக ஊடகம் மற்றும் மாவட்ட தகவல் தொடர்பு அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Orientation Programme) நிறைவடைகிறது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 12 வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் 217 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தேசிய பயிற்சி திட்டமானது இன்று IIIDEM-ல் தொடங்குகிறது. மார்ச் 4, 2025 அன்று IIIDEM-ல் நடைபெற்ற மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அடிப்படை நிலையில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களின் திறனை அதிகரிப்பதற்காக பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முயற்சி அமைகிறது.
மேலும், ஊடகம், சமூக ஊடகம் மற்றும் மாவட்ட தகவல் தொடர்பு அலுவலர்களுக்கான ஒரு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியினையும் (Orientation Programme) மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தில் (IIIDEM) இந்திய தேர்தல் ஆணையம் நிறைவு செய்தது. இவ்வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது (Orientation Programme) வளர்ந்து வரும் ஊடக தளங்களில் தேர்தல் அலுவலர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல் திட்டங்களின் தயாரிப்பு நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இதில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடக அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளான மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம், 1950 & 1951, வாக்காளர் பதிவு குறித்த விதிகள். 1960. தேர்தல் நடத்தும் விதிகள், 1961 மற்றும் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான தகவல் பரவல், தவறான தகவல்களைக் கையாளுதல் மற்றும் பல்வேறு ஊடக தளங்களில் வாக்காளர் விழிப்புணர்வு போன்றவற்றின் தகவல் தொடர்பு உத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமைந்தது.