சட்டத்துறை அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் இன்று (07.04.2025) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் இன்று (07.04.2025) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி

இன்றைய தினம் நிருபர்களை சந்தித்த அண்ணா திமுக-வின் பொதுச் செயலாளர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கணமும் இல்லை வழியில் பயமும் இல்லை. எங்களது கவுன்டரை அவர் ஒழுங்காக படித்துப் பார்க்கவில்லை எங்களது கோரிக்கையையும் அவர் பார்க்கவில்லை. இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகள், மற்ற வழக்குகள், டாஸ்மாக் பொறுத்தவரைக்கும் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோமே தவிர, வேறு மாநிலத்திற்கு சென்று எங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால், அண்ணா திமுகவின் பொது செயலாளராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழக்கை அன்றைக்கு வேறு மாநிலத்திலேயே விசாரிக்க வேண்டும் தமிழ்நாட்டில் விசாரித்தால் சரியாக இருக்காது என்று வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், நாங்கள் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த வழக்கைப் பற்றி நாங்கள் கேட்கவே இல்லை. எங்களுடைய கோரிக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அடுத்ததாக டாஸ்மாக்கை ரெய்டு பற்றி 2016-21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து சிலர் சொல்லி அன்றைக்கு டாஸ்மாக்கில் திடீரென்று ரெய்டு நடத்தினார்கள். ஆனால், என்ன தொகை? எவ்வளவு என்று எதுவுமே அவர்கள் வெளியிடவில்லை. என்ன கணக்குகள் கைப்பற்றினோமா? எவ்வளவு தொகை அங்கே முறையீடு செய்யப்பட்டது என்பதெல்லாம் சொல்லவில்லை. அன்றைக்கு ஒருவர் சொன்னார் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார். அதைத்தான் அடுத்து ED சொன்னது. அதாவது அண்ணாமலை என்ன சொன்னாரோ அது ED சொன்னது. அதற்குப் பிறகு டெல்லிக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதை ஆயிரம் கோடி என்றார். அதாவது அவர்களுக்கு உள்ள தொடர்பு அதன் மூலமாக தெரியுமே தவிர நிச்சயமாக எங்களுடைய ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறை கூடும் இல்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். எந்த தவறுக்கும் எங்களுடைய தலைவர் இடம் கொடுக்கவில்லை. முதலமைச்சரோ, அரசோ இடம் கொடுக்கவில்லை என்பதை நாங்கள் வழக்கை அவர்கள் தொடர்ந்தால் வழக்கில் நிரூபிக்க முடியும். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் அங்கே முன் வைத்தோம் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். அதனால், சட்டமன்றத்தில் டாஸ்மாக்கை பற்றி பேசவில்லை எங்களை அனுமதிக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார். நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு வழக்கைப் பற்றி விசாரிக்கக் கூடாது. உடனே அவர் சொல்கிறார் நீங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நாங்கள் ட்ரான்ஸ்ஃபர் பெட்டிஷன் போடவில்லை கவுண்டரில் தான் சொல்லி இருக்கிறோம். இது போன்று ஒரே இடத்தில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் விசாரியுங்கள் என்று அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானம். ஏனென்று சொன்னால், இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னால் நம்முடைய இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர்கள் சொல்வது என்று என்னவென்று சொன்னால், இந்தியாவில் நீலப் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமான பங்கை வகிக்கும். எனவே, அந்த நீல பொருளாதரத்தை முன்னேற்றுவதற்காக இந்த பயணம் உறுதுணையாக இருக்கும் என்றெல்லாம் அன்று சொல்லிவிட்டு, அங்கே சென்று நம்முடைய மீனவர்களை பற்றி எந்தவிதமான பேச்சும் பேசவில்லை. கச்சத் தீவை பற்றி பேசவில்லை. அதைப்பற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவர் செல்வதற்கு முன்கூட்டியே, மீனவர்கள் குறித்து பேசி அவர்களுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கேட்டார். அந்த தீர்வு காணப்படவில்லை.

அடுத்ததாக அங்கு இருக்கக்கூடிய நிலைமை பற்றி பார்த்தோமேயானால், பெரும்பாலான படகுகள் விடுவிக்கப்பட்டது அல்லது நம்முடைய மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்று சொன்னால், அவர்கள் நீதிமன்றத்தில் சென்று வழக்கு நடத்தி, தண்டனை அனுபவித்த பிறகு அரசுக்கு தெரிந்த சம்பவங்களாக என்று எடுத்துக் கொண்டால், 332 சம்பவங்கள் - அதில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 3684 கைப்பற்றப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 613 இவைகள் எல்லாம் எங்களுக்கு கிடைத்த புள்ளி விவரங்கள். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 3601 அதாவது ஒன்றிய அரசு பேசி விடுதலை செய்தது என்பது 10 சதவிகிதம் கூட இருக்காது ஒரு ஆண்டு ஆறு மாதம் ஒன்றறை ஆண்டு காலம் என்று தண்டனையை அனுபவித்து கடுங்காவல் தண்டனையை அனுபவித்துதான் அந்த மீனவர்கள் திரும்பி இருக்கிறார்கள். இப்போது 83 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள் அதில் 11 பேர் விடுதலை செய்ய இருப்பதாக கடந்த 27ஆம் தேதி அவர்கள் சொல்லியிருக்கிறார். தமிழக அரசு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது. மீட்பு படகுகளை அனுப்புவதற்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்லியும், இன்னும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவர்களும் இன்றைக்கு சிறையில் இருந்து தான் வெளியே வருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒன்றிய அரசு 2016 தேர்தலுக்கு முன்பு, நாங்கள் அவர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வோம். ஒருவர் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள். இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கைதுக்கு அவர்கள் காரணமாக இருந்து விட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்களுடைய முதலமைச்சர் தமிழக அரசின் நிதியிலிருந்து ஏறக்குறைய 576 கோடி ரூபாய் அளவிற்கு இன்றைக்கு மீனவர்களின் நலன் காப்பதற்கான திட்டங்கள் - அவர்களின் மீன்பிடித் தொழில் சிறப்பதற்கான திட்டங்கள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கான வழிவகைகளை இன்றைக்கு சட்டமன்றத்தில்

அறிவித்திருக்கிறார்.

கேள்வி படகுகளை எல்லாம் அரசுடைமை ஆக்கியிருக்கிறார்கள் அதையெல்லாம் நாம் கேட்டிருக்கிறோமா? மீனவர்களை மட்டும் விடுவியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் லட்சக்கணக்கான மதிப்புள்ள படகுகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம் - அது பற்றி

பதில் நாங்கள் லட்சக்கணக்கான படகுகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தரவில்லை. எனவே தான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து மீண்டு வந்த மீனவர்களுக்கெல்லாம் யார் யார் படகுகள் சேதம் அடைந்ததோ, அங்கு பறிமுதல் செய்யப்பட்டதோ அவர்களுக்கெல்லாம் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி தந்திருக்கின்ற, இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரே மாநிலம் நம்முடைய தமிழ்நாடு தான்.

கேள்வி தொடர்ந்து அமலாக்கத்துறை திரு.கே.என்.நேரு அவர்களின் வீட்டிலும் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது அவர்களின் உறவினர்களின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது இந்த சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் - அமலாக்கத்துறை என்பது நம்முடைய அண்ணா திமுகவைப் போல பாரதிய ஜனதாவின் ஒரு கூட்டணி கட்சி. அது போல, சந்திரபாபு நாயுடு அவர்களின் கட்சியைப் போல, நிதிஷ் குமார் கட்சியைப் போல அமலாக்க துறையை ஒரு கூட்டணியாக தான் பார்க்கிறோமே தவிர, வேறு எதுவும் இல்லை. அதுவும் இன்றைக்கு அரசியல் முத்திரை குத்தப்படாத ஒரு கூட்டணிக் கட்சி.

கேள்வி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இது தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பை கேட்டார்கள் நீங்கள் இந்த வழக்கு தொடர்பாக வேறு மாநிலத்திற்கு மாற்றுகிறீர்கள் என்று அவர் சொன்னார் அதற்கு நீங்கள் உள்ளேயே பதில் கூறி இருக்கலாமே இது போன்று நாங்கள் உச்சநீதிமன்றத்தில் ஒட்டுமொத்தமாக வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் பதில் எங்களது கவுண்டரில் நாங்கள் சொல்லி இருக்கின்றோம் அதை அவர் சரியாகப் பார்க்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறார்களே தவிர எங்கள் கவுண்டரை அவர் படித்துப் பார்த்து இருக்க வேண்டுமே அல்லவா?

கேள்வி நீங்கள் சொல்வது போல் திமுக ஆட்சியில் டாஸ்மாக் முறைகேடும் ஊழலும் நடைபெறவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து விசாரிப்பதற்கு பதிலாக அமலாக்கத்துறை மொத்தமாக இந்த வழக்கை விசாரிக்கவே கூடாது என்று ஃபைல் செய்திருக்கிறீர்கள் ஏன் இந்த பெட்டிஷன் செய்திருக்கிறீர்கள் அது பற்றி

பதில் ED பெட்டிசனை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்த வழக்கை தொடர்ந்து அவர்கள் எங்களை துன்புறுத்தல். அச்சுறுத்தல் கொடுக்கக் கூடாது என்பதற்காக ED மீது வழக்கு தொடுத்திருக்கிறோம். அடுத்து, ஒரு விசாரணை என்று வரும் பொழுது உச்ச நீதிமன்றம் என்றால் இறுதி தீர்ப்பாக முடிந்துவிடும். எனவே தான், உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும், ஏன் இந்த பிரச்சனையை வளவளத்து கொண்டே செல்ல வேண்டும் என்றும், எங்களுக்கு பயம் கிடையாது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முதலமைச்சர் அவர்களின் திட்டவட்டமான முடிவு.

கேள்வி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது ஏதேனும் பிரச்சனை இருக்குமா அல்லது என்ன காரணம் அது பற்றி

பதில் நேற்றைக்குக் கூட ஒரு வழக்கறிஞர் திடீரென்று உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு போட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் சகோதரர் தற்போது இருக்கின்ற வழக்கை நடத்துகின்ற வழக்கறிஞர் என்று. இப்படி எல்லாம் பிரச்சனைகளை கிளப்பிக் கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட பிரச்சனைகளை கிளப்பி, அந்த வழக்கை இழுத்தடிப்பதை விட உச்சநீதிமன்றத்தில் ஒரேடியாக வழக்கை முடித்து விட வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். கேள்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தால், சரியாக இருக்காது என்று திமுக நினைக்கிறதா அது

பதில் இல்லை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய நீதிபதிகள் நியாயத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள் - இரவு பகல் பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள் - நல்லவர்கள். எனவே, அவர்களின் தீர்ப்பின் மீது எந்தவித சந்தேகமும், அவர்கள் நடவடிக்கைகளை அரசுக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது - அவர்களுக்கும் எந்தவிதமான கெட்ட பெயர்களும் வந்து விடக்கூடாது. அதே நேரத்தில், இது போன்ற நீதிபதியின் சகோதரர் இவருக்கு வழக்கறிஞராக இருக்கிறார் என்று ஒரு மனு போடுகிறார் - இப்படி அவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட பழிச்சொல் எல்லாம் யாருக்கும் வர வேண்டாம். நிம்மதியாக இந்த வழக்கை முடிப்போம் உச்சநீதிமன்றத்தில் முடிப்போம் என்பதுதான் எங்களுடைய எண்ணம்.

கேள்வி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றுவார்களா? இல்லை என்றால் நீதிபதி விளக்கிக் கொள்வார்கள். ஆனால், நீங்களே இந்த வழக்கில் முந்துவதற்கு என்ன காரணம்? அது பற்றி

பதில் நாங்கள் முந்தவில்லை நாங்கள் முதலில் ஒரு நீதிபதி அமர்வு விசாரித்து STAY கொடுத்த பிறகு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. இப்படியெல்லாம் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறோம்.

கேள்வி இந்த எஃப்.ஐ.ஆர் எல்லாம் 2016 முதல் 2021 வரையிலானதா? அதில் எத்தனை எஃப்.ஐ.ஆர் இருக்கிறது? அது பற்றி

பதில் எத்தனை எப்.ஐ.ஆர் என்பது பற்றி நீங்கள் அமலாக்க துறையை தான் கேட்க வேண்டும். அது பற்றி அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்

கேள்வி இந்த ஊழல் முறைகேடு என்பது எந்த காலகட்டத்திற்கு உரியது என்று பார்க்கிறீர்கள். அதை விசாரிப்பதால் என்ன பிரச்சனை இருக்கிறது பதில் அதில் ஒன்றும் பிரச்சனை கிடையாது. அதனால் தான் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரே அடியாக தீர்வு காணவேண்டும் யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

கேள்வி அந்த Jurisdiction-ல் தானே விசாரிக்கப்பட வேண்டும் அது

பதில் உச்ச நீதிமன்றம் அனைத்து Jurisdiction-லும் விசாரிக்கலாம். இந்தியா முழுவதும் உள்ள எந்த வழக்கையும் விசாரிக்கின்ற அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது. அதனால் Jurisdiction என்ற கேள்வியே கிடையாது.

கேள்வி கடந்த காலங்களில் டாஸ்மாக் நிறுவனங்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? அது பற்றி....

பதில் இன்றைக்கு வழக்கு அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும்போது சொல்லக்கூடிய ஒன்று தான். அப்படி நடந்திருந்தால் அதை விசாரிக்கட்டும் அதைப் பற்றிய கவலையே கிடையாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.