அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்திட தொழில்முனைவோருக்கு அழைப்பு
தமிழ்
நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்க்களை
உருவாக்கிவிடவும் புதிய கால்நடை பண்ணைகள் அமைப்பதற்க்கு 2021 - 2022 ஆம்
நிதியாண்டில் இருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து
வருகின்றது. புதிய கோழிபண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி
பண்ணைகள் உருவாக்குவதின் வழி மாநிலத்தின் இறைச்சி, மற்றும் முட்டை உற்பத்தி
அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு
திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தீவனம், தீவனபயிர்
சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளர்ப்பு, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு
வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்ப பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம்
அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10.00
லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும் பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00
லட்சம் முதல் ரூ. 30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு
(TMR), தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட
தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கபடுகிறது. இத்திட்டத்தில் தனி நபர், சுய உதவி
குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு(FPO), விவசாய கூட்டுறவுகள்,
கூட்டு பொறுப்பு சங்கங்கள் (ILG), பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணபிக்க தகுதியானவர்கள்
ஆவர்.https://nlm.udyamimitra.in/என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை
http://www.tnlda.tn.gov.in/என்கிற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான விரிவான திட்ட அறிக்கையினை
விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம்
செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய அருகில் உள்ள
கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை
பராமரிப்புத்துறை அலுவலர்கள், அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு கால்நடை மேம்பாட்டு முகமை,
சென்னை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
அரசு செயலாளர் கால்நடை பராமரிப்பு, பால்வளம்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை