இணையவழி விளையாட்டு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள்

0 MINNALKALVISEITHI
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தால், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் உதவியுடன், இணையவழி விளையாட்டு குறித்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. 

இப்போட்டியில், ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் (தமிழ்), பள்ளி மாணவர்கள் (ஆங்கிலம்), கல்லூரி மாணவர்கள் (தமிழ்) மற்றும் கல்லூரி மாணவர்கள் (ஆங்கிலம்) ஆகிய நான்கு பிரிவுகளிலும் தலா 6 ஆறுதல் பரிசுகளுடன் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மேற்கண்ட பிரிவுகளில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பரிசு பெற்ற 12 மாணவ மாணவியர்களுக்கு இன்று (28.02.2025), சென்னை, நகர் நிர்வாக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் தலைவர் திரு.முகமது நசிமுத்தின், இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இப்பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் முழு நேர உறுப்பினர் முனைவர் மு.சி.சாரங்கன், இ.கா.ப., (ஓய்வு) அவர்கள், பகுதி நேர மரு.ஓ.எஸ்.ரவிந்திரன். முனைவர் உறுப்பினர்கள் சி.செல்லப்பன், தொழில்நுட்பக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.