கல்லூரி மாணவர்கள் விரும்பி பயன்படுத்திடும் வகையில் தரமான மடிக்கணினி / கைக்கணினி வழங்கப்படும்

0 MINNALKALVISEITHI
கல்லூரி மாணவர்கள் விரும்பி பயன்படுத்திடும் வகையில் தரமான மடிக்கணினி / கைக்கணினி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் அளித்த விளக்கத்தை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு 

2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள். கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி! யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round தமிழ்நாடு பட்ஜெட் 2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.