ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் நியமனம்

0 MINNALKALVISEITHI
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் நியமனம் 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய நலனை பாதுகாக்கவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம்' அமைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. 

இவ்வாணையத்தில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் முடிவுபெற்ற நிலையில், தற்போது முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன். தலைவராகவும் மற்றும் திருமதி.ஜெ.ரேகாபிரியதர்ஷினி, உறுப்பினராகவும்பணிபுரிந்துவருகின்றனர். எனவே, இவ்வாணையத்திற்கு காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் திரு. இமயம்(வெ.அண்ணாமலை). (கடலூர்மாவட்டம்) அவர்களை துணைத்தலைவராகவும் திரு. செ. செல்வகுமார், (கோயம்புத்தூர்மாவட்டம்) முனைவர் சு. ஆனந்தராஜா, (தஞ்சாவூர்மாவட்டம்) திரு. மு.பொன்தோஸ்,(நீ லகிரிமாவட்டம்) மற்றும் திரு.பொ. இளஞ்செழியன் (திருநெல்வேலிமாவட்டம்) ஆகியோர்களை உறுப்பினர்களாக நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.