திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்கு சேப்பாக்கம் அய்யா பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி முத்துக்காளத்தி தெரு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகளில், குடியிருப்பதற்கான ஆணைகளை வழங்கினார். 
2021 2022 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவை ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி திருவல்லிக்கேணி, துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ரூ.3.22 கோடி செலவிலும், பொன்னப்பன் சந்தில் ரூ.19.45 இலட்சம் செலவிலும் கட்டப்பட்ட புதிய வணிக வளாகங்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 7.8.2024 அன்று திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு துணை முதலமைச்சர் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 3.2.2025 அன்று சேப்பாக்கம், அய்யாப்பிள்ளை தெருவில் ரூ.94.00 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 6 குடியிருப்புகளை கொண்ட கட்டடம் மற்றும் திருவல்லிக்கேணி முத்துகாளத்தி தெருவில் ரூ.94.00 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 3 குடியிருப்புகளை கொண்ட கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (24.2.2025) திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்கோயில் பணியாளர்கள் 9 நபர்களுக்கு சேப்பாக்கம் அய்யா பிள்ளை தெரு, திருவல்லிக்கேணி முத்துக்காளத்தி தெரு ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்புகளில், குடியிருப்பதற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., மாநகராட்சி நிலைக் குழுத்தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, சென்னை மண்டல இணை ஆணையர் திருமதி கி.ரேணுகாதேவி, துணை ஆணையர்/செயல் அலுவலர் திருமதி சி.நித்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.