புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (1.2.2025) தலைமைச்
செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களான திரு. ஆர்.
சதீஷ் (தருமபுரி), திரு. எஸ். சரவணன் (திண்டுக்கல்), திரு. எம். பிரதாப்
(திருவள்ளூர்), திரு. A. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), திரு. எஸ். சேக் அப்துல்
ரகுமான் (விழுப்புரம்), திரு.கே. தர்பகராஜ் (திருவண்ணாமலை), திரு.வி. மோகனசந்திரன்
(திருப்பத்தூர்), டாக்டர் ஆர். சுகுமார் (திருநெல்வேலி), திருமதி கே.
சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச்
சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சித்
தலைவர்களிடம் உரையாற்றிய போது, இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் களத்தில்
இருக்கப் போகும் நீங்கள், அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும்
திட்டங்கள். மக்கள் நலத்திட்டங்கள். இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை
தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,
அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும்
அறிவுறுத்தினார்.
மேலும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின்
முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காணப்பட வேண்டும் என்றும்
தெரிவித்தார். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு,
அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் FFUL வேண்டும்
என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன்
மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும்
என்றும் அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாவட்டமாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு
வரும்போது, அங்கு மக்களை சந்திக்கின்றபோது, அவர்கள் எங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்று பாராட்டும்படியாக பணியாற்ற வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார். மக்களின் பாராட்டைப் பெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாக
களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை கவனமாக
கண்காணித்து திட்டங்கள் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த
வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்ற இருக்கும்
அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போது. தலைமைச் செயலாளர் திரு. நா.
முருகானந்தம், இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப.,
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
