38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 4.35 கோடி உயரிய ஊக்கத்தொகை

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 4.35 கோடி உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கினார். 
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (19.2.2025) சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள சென்னை ஒலிம்பிக் அகாடமியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 4.35 கோடி உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை 

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை குவித்த 158 வீரர். வீராங்கனைகளுக்கு 4 கோடியே 35 இலட்சம் ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குகின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திப்பதில் நாங்கள் மிகுந்த பெருமையடைகின்றோம். மகிழ்ச்சியடைகின்றோம். உங்களை எல்லாம் வாழ்த்துகின்றோம். விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டு வீரர்கள் நீங்கள் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றீர்கள். இந்த மேடையில் கூட தடகளத்தை எடுத்துக் கொண்டால், தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி வருகின்ற தடகள வீராங்கனை தங்கை வித்யா ராம்ராஜ். அதேபோல, தேசிய நீச்சல் சாம்பியன் தம்பி பெனடிக்டன் ரோகித் அவர்களும் இன்றைக்கு இந்த மேடையில் நம்மோடு அமர்ந்திருக்கின்றார்கள். 

விளையாட்டுத் துறையில் சாதிக்க துடிக்கின்ற பல வீரர்களுக்கு தம்பி ரோஹித் அவர்கள் ஒரு முன்மாதிரி நீச்சல் வீரராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சிறிய வயதில் தனக்கு காலில் காயம் ஏற்பட்டாலும், அதிலிருந்து மீண்டு நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு இன்றைக்கு பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்துக் கொண்டு வருகிறார். emmas 11th Asian Age Group Swimming Championships 2023- அவர் பங்கேற்றார் இந்த முறை. 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இன்றைக்கு சாதனை படைத்திருக்கிறார். தங்கம் மட்டுமல்ல, 50 மீட்டர் தூரத்தை 24.39 விநாடிகளில் நீந்தி தம்பி ரோகித் அவர்கள் Record ல் இடம் பிடித்திருக்கிறார். தேசிய விளையாட்டு போட்டியில் 6 பதக்கங்களை வென்று அவர். தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். SDAT-ன் MMS திட்ட வீரரான தம்பி தம்பி ரோகித் இன்னும் பல சாதனைகளை படைக்க அவருக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 

அதே போல தேசிய தடகள வீராங்கனை தங்கை வித்யா ராமராஜும் இங்கே வந்திருக்கின்றார். SDAT விடுதி மாணவியான தங்கை வித்யா. 1984-ல் பிடிஉஷா அவர்கள் நிகழ்த்திய சாதனையை ஈடு (Equal) செய்யும் விதமாக 2022 ஆசியன் கேம்சுபில் 400 மீட்டர் Hurdles பந்தயத்தில் 55.42 விநாடிகளில் ஓடி சாதனை படைத்திருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற அவர். SDAT- EUTE திட்ட வீரராகவும் திகழ்ந்து வருகின்றார். தற்போது நடைபெற்ற 38-ஆவது தேசிய விளையாட்டு போட்டியில், வெவ்வேறு பிரிவுகளில் ஒரு தங்கம். ஒரு வெள்ளியை வென்று சாதனை படைத்துள்ளார். அவர்கள் இரண்டு பேருக்கும். பதக்கம் வென்ற அத்தனை பேருக்கும் நம்முடைய பாராட்டுக்களையும். வாழ்த்துகளையும். தெரிவித்துக் கொள்கின்றோம். 

உத்தரகாண்டி நடந்த 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட 158 வீரர்களில் 92 பேர் பதக்கங்களை win செய்து கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த மகத்தான சாதனையை அங்கீகரிக்க வேண்டும். உங்களை எல்லாம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவேண்டும். பாராட்டவேண்டும் என்ற நோக்கத்தில் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றோம். National Games நடந்து முடிந்து ஐந்தே நாட்களில் உங்களுக்கு இந்த உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. எப்படி நீங்கள் record create செய்துள்ளீர்களோ, அதே போல தமிழ்நாடு அரசும் இந்த நிகழ்ச்சி மூலம் record create செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே இந்த மாதிரி, வெற்றி பெறுகின்ற வீரர்களை உடனுக்குடன் சிறப்பிக்கின்ற மாநிலம் நம்முடைய தமிழ்நாடு மட்டும் தான். இன்றைக்கு, பிப்ரவரி மாதத்தில், 158 பேருக்கு high cash incentive 4 கோடியே 35 லட்சம் ரூபாய் வழங்குகின்றோம். 

அதே போல, இந்த 158 பேரில், 29 பேர் நம்முடைய SDAT-யின் ELITE. MIMS, CDS திட்டங்களால் வருடந்தோறும் பயன்பெற்றுக் கொண்டு வருகிறார்கள். நம்முடைய விளையாட்டு வீரர்கள் உங்களுடைய சாதனைகளுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றுதான், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதன்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்தார்கள். இதுவரைக்கும். இந்த சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 632 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி வழங்கி இருக்கிறோம். விளையாட்டுத் துறைக்கு நம்முடைய அரசு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதற்கு இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டை சொல்ல விளையாட்டுத்துறையும். மற்ற முடியாது. 

துறைகள் அதுமட்டுமல்ல, போல தான். விளையாட்டுத்துறையை தேர்ந்து எடுத்தாலும், உங்களுடைய வாழ்க்கையில நீங்கள் நிச்சயம் சாதிக்கலாம். விளையாட்டுத்துறையில் திறமை இருந்தால், அரசு வேலைக்கு போகலாம் என்று ஒரு நிலையை நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 84 வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமன ஆணைகளை அவருடைய கைகளாலே வழங்கி இருக்கின்றார். ஆகவே, நீங்கள் அத்தனை பேரும் தன்னம்பிக்கையோடு விளையாடுங்கள். உங்களுக்கு என்றைக்கும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், நம்முடைய துறையும், அரசும் என்றென்றைக்கும் துணை நிற்கும். இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கின்ற உங்கள் ஒவ்வொருவரையும் நான் இன்னும் சிறப்பாக, அதிகமாக பாராட்டுகின்றேன். 

ஏனென்றால், 2023-ல் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு நம்முடைய தமிழ்நாடு 10 ஆவது இடத்தில் இருந்தது. இன்றைக்கு முன்னேறி 6-ஆவது இடத்துக்கு வந்திருக்கின்றோம். சீக்கிரமே முதல் இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை உங்களை பார்க்கின்றபோது இருக்கிறது. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதற்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். இந்த அரசு அதை செய்து தருவதற்கு தயாராக இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொண்டு, இந்த உலகத்தில் எந்த மூலையில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், தமிழ்நாட்டு திறமையாளர்களை அதில் கலந்துகொள்ள வைப்பது, இந்த அரசின் கடமை. ஓர் அண்ணனாக நான் என்றைக்கும் உங்களுக்கு எல்லா வகையிலேயும் துணை நிற்பேன் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உயரிய ஊக்கத்தொகையை பெற வந்துள்ள அத்தனை வீரர்களுக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் மேம்பாட்டு தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா.இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை தலைவர்கள் திரு. என். ராமசந்திரன், டாக்டர். அசோக் சிகாமணி, தமிழ்நாடு வாலிபால் அசோசியேசன் தலைவர் திரு.கௌதம சிகாமணி, துணைத்தலைவர் திரு. அர்ஜூன் துரை. தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேசன் தலைவர் திரு.ஜசரி கணேஷ், சர்வதேச தடகள வீராங்கனை செல்வி. வித்யா ராம்ராஜ், தேசிய நீச்சல் வீரர் செல்வன். பெனெடிக்டன் ரோஹித், 38 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.