"மனித கழிவுகளை மனிதனே
கைகளால் அகற்றுதல் தடைச் சட்டம்" நடைமுறைபடுத்தப்பட்டது குறித்து கலந்தாய்வு
கூட்டம் நடைபெற்றது.
2013 ஆண்டில் இயற்றப்பட்ட "மனித கழிவுகளை மனிதனே கைகளால்
அகற்றுதல் தடைச் சட்டம்" நடைமுறைபடுத்தப்பட்டது குறித்து மாண்புமிகு தூய்மை
பணியாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் திரு. M.வெங்கடேசன் அவர்களின் முன்னிலையில்
கலந்தாய்வு கூட்டம் 22.01.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனித கழிவுகளை மனிதனே கைகளால் அகற்றுதல் தடைச் சட்டத்தினை தமிழக
அரசு முழு முனைப்புடன் செயல்படுத்துவது குறித்தும் மற்றும் பணியின் போது நிகழும்
எதிர்பாராத உயிரிழப்புக்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு குறித்தும்,
விவரிக்கப்பட்டது. இது தவிர, டாக்டர் பால்ராம் சிங் Vs இந்திய ஒன்றியம் வழக்கில்
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும்
விரிவாக தெரிவிக்கப்பட்டது.
கழிவுநீர் வடிகால் தூய்மை பணிகளை இயந்திரமயமாக்குதல்,
பணியின்போது உயிரிழந்தோரின் குடும்ப வாரிசுகளுக்கு கல்வி உதவி தொகை / தொழில்
பயிற்சி வழங்குதல், மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் பற்றி விரிவாக
விளக்கப்பட்டது. மாண்புமிகு தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத் தலைவர்,
தமிழ்நாடு இச்சட்டத்தினை முழுமையாக அமல்படுத்த எடுத்து வரும் முயற்சிகளை கேட்டு
அறிந்ததுடன் வருங்காலத்தில் கழிவுநீர் பணிகளில் உயிரிழப்புகள் முற்றிலும்
தவிர்க்கப்ப்ட வேண்டும். மேலும் தூய்மை பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் சமூக
பாதுகாப்பு நலன்களை பெறவேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் ஊரக
வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர்
