மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில்
நடைபெற உள்ள ஏ.டி.பி டென்னிஸ் போட்டிக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 1
கோடிக்கான காசோலை மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.14.48
வட்சம் மதிப்பில் அதிநவீன பந்தய சைக்கிள்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில்
பங்கேற்க செலவீன தொகைக்கான காசோலைகளை வழங்கி, இந்தியாவின் மதிப்புமிக்க அர்ஜுனா
விருது பெற்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில்
வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்.வீராங்கனைகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (23.01.2025) சென்னையில்
வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி டென்னிஸ் போட்டிக்காக தமிழ்நாடு
அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலை மற்றும் தமிழ்நாடு சாம்பியன்ஸ்
அறக்கட்டளை சார்பில் ரூ.14.48 லட்சம் மதிப்பில் அதிநவீன பந்தய சைக்கிள்கள்
மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செலவீன தொகைக்கான காசோலைகளை வழங்கி,
இந்தியாவின் மதிப்புமிக்க அர்ஜுனா விருது பெற்ற தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள்
மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை
பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ்
போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை
தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் திரு. விஜய் அமிர்தராஜ் அவர்களிடம் வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், ஆகியோருக்கு மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதவமைச்சர் அவர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். மேலும்
இன்றைய நிகழ்வில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மற்றும் தேசிய அளவிலான
கையுந்து போட்டி, இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) நடத்திய
68 வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தேசிய கூடைப்பந்து போட்டி ஆகிய
போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் 60 வீரர், வீராங்கனைகள் மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில். க்ளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல்
தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அரசு உயர்
அலுவலர்கள். பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
