தமிழ் வளர்ச்சித் துறை
திருவள்ளுவர் திருநாள்
திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை
அணிவிக்கும் நிகழ்ச்சி 15.01.2025
நாள்:13.01.2025
திருவள்ளுவர் திருநாளான தை 2ஆம் (15.01.2025) நாளன்று மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள
திருவள்ளுவரின் திருவருவச் சிலைக்கு
10.00 மணிக்கு மாலை
அணிவித்து மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சியும். 2025ஆம் ஆண்டிற்கான
திருவள்ளுவர் விருது, 2024ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது.
பெருந்தலைவர் காமராசர் விருது. மகாகவி பாரதியார் விருது. பாவேந்தர் பாரதிதாசன்
விருது. தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.
விசுவநாதம் விருது. தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது மற்றும்
முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய 10 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறையில் காலை 10.30 மணிக்கு
நடைபெறவுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,
சீர் பெருமக்கள்.
தமிழறிஞர்கள். அரசு அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளைத் தமிழ்
வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.
