சிவகங்கை மாவட்டத்தில் 53,039 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

0 MINNALKALVISEITHI
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.376.49 கோடி ரூபாய் மதிப்பிலான 46 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 33 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 53,039 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை (21.1.2025) சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு வருகை தந்தார். 

அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ப. சிதம்பரம் அவர்களின் சொந்த நிதியில் 12 கோடி ரூபாய் செலவில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை காரைக்குடி, அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, மாணவிகளிடம் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அவர்களின் மானியக் பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்புகள், சட்டப்பேரவை கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் (22.1.20 அடிக்கல் நாட்டி, 53,039 பயனாளிகளுக்கு 161 கோடியே 11 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

சிவகங்கை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் உரத்துப்பட்டி ஊராட்சி, கிழவயல் ஊராட்சி-மணியாரம்பட்டி, உலகம்பட்டி ஊராட்சி. குன்னத்தூர் ஊராட்சி ஆகிய ங்களில் 49 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடங்கள்; - பிரான்பட்டி, சிங்கம்புணரி, மறமங்கலம், மருதங்கநல்லூர், நெஞ்சத்தூர், கங்கனி ஊராட்சி உலக்குடி, திருப்பாச்சேத்தி ஊராட்சி - திருப்பாச்சேத்தி தெற்கு, கீழடி ஊராட்சி பசியாபுரம், கானூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 3 கோடியே 35 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள்:

வாரப்பூர் ஊராட்சி குரும்பலூரில் 25 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாயக்கூடம், புழுதிப்பட்டி ஊராட்சி - மீனாட்சிபுரம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் நெற்குப்பை, கல்லல் ஊராட்சி ஒன்றியம் அ. சிறுவயல் ஊராட்சி, கண்ணங்குடி ஊராட்சி ஆகிய - இடங்களில் 2 கோடியே 73 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார நிலையக் கட்டடங்கள்; தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் நாச்சான்குளம் ஊராட்சி. 

மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மேலப்பசலை ஊராட்சி, மானாமதுரை ஊராட்சி ஓன்றியம் தெற்கு சந்தனூர் ஊராட்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 27 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலகக் கட்டடங்கள்; தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் - திருவேகம்பத்தூர் ஊராட்சியில் 9 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுயஉதவிக் குழுக்களுக்கான பணிமனை. கண்ணங்குடி ஊராட்சியில் 5 இலட்சம் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடைகள். 

கல்லல் ஊராட்சி ஒன்றியம். கீழப்பட்டமங்கலம் ஊராட்சி பெரிச்சிக்கோவில் முதல் தெற்கு நைனார்ப்பட்டி சாலை, சுண்ணாம்பிருப்பு வரத்துக் கால்வாயில் 4 கோடியே 6 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மாரந்தை ஊராட்சி மாரந்தை கோரவலசை சாலை கால்வாயில் 1 கோடியே 69 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம், மாரந்தை ஊராட்சி-தளிர்தலை கிராமம், கோரவலசை சாலை-மாரந்தை கால்வாயில் 3 கோடியே 27 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சி, அருங்காட்சியகம் அருகில் ரூபாய் 24 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புற சோதனை சாவடி கட்டிடம் என 17 கோடியே 84 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகள்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காரைக்குடி மாநகராட்சியில் கழனிவாசல் - கோட்டையூர் சாலையில் 6 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் தினசரி காய்கறி அங்காடி. 

புதுவயல் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.3-ல் 2 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் வாரச் சந்தை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் புழுதிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புவனம் அரசு மேல்நிலைப் பள்ளி, முடிகண்டம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 6 கோடியே 93 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர பிரிவுக் கட்டடம். 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் நகரம்பட்டி கிராமத்தில் 50 இலட்சம் ரூஊராட்சியில் 16 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் செலவில் வி. கரிசல்குளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் கிளாதரி ஊராட்சியில் 24 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கிளாதரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கான புதிய கட்டடங்கள்; என மொத்தம் 51 கோடியே 37 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் 46 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

 சிவகங்கை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவேகம்பத்தூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டார சுகாதார நிலையம், எம். கரிசல்குளம் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம், சாலைக் கிராமம் ஊராட்சியில் வட்டார சுகாதார நிலையம், மறவமங்கலம் ஊராட்சியில் வட்டார சுகாதார நிலையம் ஆகிய சுகாதார நிலையங்களில் 2 கோடியே 51 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், எஸ். புதூர் ஊராட்சி மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் - புதுவயல் ஆகிய இடங்களில் 11 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், நெற்குப்பை மற்றும் திருப்புவனம் பேரூராட்சிகளில் 34 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடங்கள்; நீர்வளத்துறை சார்பில் திருப்புவனம் வட்டம், வைகை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து கானூர், பழையனூர் மற்றும் இதர 17 கண்மாய்களுக்கு 40 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாசன வசதியளிக்கும் திட்டம் மற்றும் சிவகங்கை வட்டம், கல்லராதினிப்பட்டி. திருமலை. நாமனூர். 

மேலப்பூங்கடி. சாலூர். சோழபுரம், நாலுகோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள ஷீல்டு கால்வாய் மற்றும் அதன் கண்மாய்களை 28 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத் 5 விடுபட்ட பகுதிகளில் 33 கோடியே 71 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி; வருவாய் மற்றும் பேரிடர் மேலண்மைத் துறை சார்பில் பெரியகோட்டையில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் காரைக்குடியில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீரகவியரசர் முடியரசனார் திருவுருவச் சிலை அமைக்கும் பணி, சிவகங்கையில் 1 கோடியே 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மருதுபாண்டியர் சகோதரர்கள் திருவுருவச் சிலை அமைக்கும் பணி, வணிகவரித் துறை சார்பில் காரைக்குடியில் 1 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிகவரித் துறை கட்டடம், 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பூலான்குறிச்சி அரசு மருத்துவமனையில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம்; பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிங்கம்புணரி ஆர்.எம்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாலைகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி, கோவிலூர் அரசு உயர்நிலைப் பள்ளி, வி.மலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி, விசாலயன்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 7 கோடியே 91 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைக் கட்டடங்கள்; தாட்கோ சார்பில் சிங்கம்புணரி மற்றும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிகள், ஆலடிநத்தம், அமராவதிபுதூர், 

கிருங்காக்கோட்டை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் நலகிராம அறிவு மையங்கள், மல்லல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறை மற்றும் ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம், என 14 கோடியே 66 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்கள்; கூட் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 985 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர சைக்கிள்கள், திறன்பேசிகள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 

மடக்கு சக்கர நாற்காலிகள், காதொலிக்கருவிகள், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 20.036 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5512 பயனாளிகளுக்கு உதவித்தொகை, நலிந்தோர் உதவித் தொகை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 725 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், திருமண உதவித் தொகை, 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகங்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் மின்னணு குடும்ப அட்டைகள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ மானியம்; 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 1109 பயனாளிகளுக்கு விசைக்கலை கருவி, சுழற்கலப்பை, விசை உழவான். சூரியசக்தி பம்புசெட்டுகள் வழங்குதல், பண்ணை குட்டைகள் அமைத்தல், மானாவாரி மேம்பாட்டு திட்டம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் உதவிகள் வழங்குதல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரங்கள், பித்தளைத் தேய்ப்புப் பெட்டிகள், கடனுதவி.

 சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் அட்டைகள். ஆழ்துளை கிணறு மானியம், சீர்மரபினர்  இந்த விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன், மாண்புமிகு பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி ஆ.தமிழரசி, திரு.எஸ்.மாங்குடி, திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.