"மக்களுடன் முதல்வர்" திட்டம் மூன்றாம் கட்டமாக நடைமுறைப் படுத்துதல் - ரூ.45,33,560/- நிதி ஒப்பளிப்பு செய்தல்

0 MINNALKALVISEITHI
முதல்வரின் முகவரித்துறை "மக்களுடன் முதல்வர்" திட்டம் மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிக அளவில் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகள் அடங்கிய 184 வட்டம் 24 மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துதல் - ரூ.45,33,560/- நிதி ஒப்பளிப்பு செய்தல் வெளியிடப்படுகிறது 
1) அரசாணை (நிலை) எண்.760, பொது (முதல்வரின் முகவரி)த் துறை, நாள்: 14.12.2023 2) அரசாணை (நிலை) எண். 428, பொது (முதல்வரின் முகவரி)த் துறை, ஆணை: 15116: 14.06.2024 தமிழ்நாடு அரசு, பொது மக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து, சீரிய நிருவாகத்தை வழங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. 

2. இந்த நோக்கத்தின் அடிப்படையில், பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் முக்கிய சேவைகளை, அவர்களின் இல்லத்திற்கு அருகே வழங்கும் நோக்கத்துடன், மக்களுடன் முதல்வர் திட்டம் 2023-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மக்களுடன் முதல்வர் முகாம்களில், 15 அரசுத் துறைகள் வழங்கும், 44 சேவைகளை அரசு அடையாளம் கண்டு பார்வை-1இல் படிக்கப்பட்ட அரசணையின்படி முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் 18.12.2023 முதல் 30.01.2024 வரை 2,058 மக்களுடன் முதல்வர் (நகர்ப்புற) திட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. மேற்காணும் முகாம்களில், 905,585 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்பட்டது. 

3. பார்வை-2இல் படிக்கப்பட்ட அரசணையின்படி. 11.07.2024 முதல் 09.09.2024 வரை மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் 2.344 மக்களுடன் முதல்கூர் (ரகம்) திட்ட முகாம்கள் நடத்தப்பட்டது. மேற்காணும் முகாம்களில் 14,64,926 மனுக்கள் பெறப்பட்டு தற்போது வரை 12,80,179 மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பபட்டுள்ளது. 

4. பார்வை-1 மற்றும் 2இல் படிக்கப்பட்ட அரசாணைகளின் படி நடத்தப்பட்ட ”மக்களுடன் முதல்வர் முகாம்கள் பொது மக்களிடம் குறிப்பிடத்தக்க வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவிங் வசிக்கும், இவ்வாணையின் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள 24 மாவட்டங்கள், 184 வட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில், 1270 "மக்களுடன் முதல்வர் முகாம்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. " 

5. மேலே, பத்தி 4-இல் குறிப்பிடப்பட்டுள்ள "மக்களுடன் முதல்வர்" முகாம்களை நடத்திட தேவையான நிதியை, கீழ்க்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யுமாறு அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது:- வ. எண் 1 இனம் கணினி / மடிக்கணினி மற்றும் அச்சுப்பொறி உபகரணங்களுக்கான வாடகை செலவுகள் (முகாம் ஒன்றுக்கு 7 கணிப் பொறிகள் மற்றும் 5 அச்சுப்பொறிகள், முகாம்களுக்கான வீதம் |வாடகைத் 1270 மொத்தம் செலவிடப் பட வேண்டிய (ரூபாயில்) நிதி ஆதாரம் 45,33,560/- மாநில பொதுநிதி 2 3 தொகை ) ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (தகவல் கல்வி 1270 முகாம்களுக்கான இணைய வசதி, அடிப்படை வசதிகள், எழுதுபொருட்கள், இதர உபகரணங்கள் போன்றவற்றிற்கான செலவு - ஒரு முகாமிற்கு ரூ.30,000/- வீதம் மற்றும் விழிப்புணர்வு 3,81,00,000/- நடவடிக்கைகள் (IEC))/ பொது நிதி (இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றறிக்கை எண் 1039/2024/BSS-3, நாள் 06.06.2024) 1270 முகாம்களுக்கான விழிப்புணர்வு மற்றும் விளம்பரச் செலவு - ஒரு முகாமிற்கு ரூ. 5,000/- வீதம் மாவட்டங்களுக்கான சில்வறை 4 5% செய்தி மற்றும் மக்கள் 63,50,000/- செலவினம் 2,26,678/- தொடர்புத் துறை ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்ட நிதி  மாநிலத் 5 தலைமையகத்திற்கான சில்லறை செலவினம் மொத்த செலவினம் 1,00,000/- 4,93,10,238/- ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்ட நிதி 

6. மேற்படி முதல்வரின் முகவரித்துறையின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து பத்தி-5இல் உள்ள அட்டவணையின், வரிசை எண்-1இல் குறிப்பிட்டுள்ள முகாம்களுக்கு தேவைப்படும் கணினி மற்றும் துணை பாகங்களை வாடகைக்கு வாங்கிட ரூ.45,33,560/- (ரூபாய் நாற்பத்தைந்து வட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து ஜந்நூற்றி அறுபது மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. 

7. மேலே பத்தி 6-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்றுவைக்கப்பட வேண்டும்: 2052 00 தலைமைச் செயலகம், பொதுவான பணிகள்- 090 தலைமைச் செயலக மாநிலச் செலவினங்கள் முதலமைச்சரின் உதவி - cQ மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டம் - 309 உதவித் தொகை 03 குறிப்பட்ட திட்டங்களுக்கான உதவித்தொகை (IFHRMS DPC : 2052 00 090 cQ 30903) 

8. மேற்காணும் பத்தி -5இல் உள்ள அட்டவணையின் வரிசை எண் -2இல் குறிப்பிட்டுள்ள, முகாம்கள் நடத்துவதற்கு தேவையான ரூ.3,81,00,000/- க்கான செலவுகளை, ஊரக வளர்ச்சி துறையின் கீழுள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட (தகவல், கல்வி, விழிப்புணர்வு நடவடிக்கைகள்) (AGAMT (IEC) நிதி/பொது நிதியில் இருந்து ஒரு முகாமிற்கு ரூ.30,000/- வீதம், 1270 முகாம்களுக்கு செலவிடவும், மேற்காணும் தொகையில் ஒரு முகாமிற்கு ரூ,5000/- வீதம் இணைய வசதியை உறுதிபடுத்த பயன்படுத்தவும், ஊரக அனுமதித்து அரசு வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆனையிடுகிறது. இயக்குநருக்கு 

9. மேற்காணும் பத்தி -5இல் உள்ள அட்டவணையின் வரிசை எண் -3இல் குறிப்பிட்டுள்ள செலவினமான மொத்தம் ரூ.63,50,000/- யை முகாம்கள் நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு மற்றும் விளம்பரச் செலவுகளை, மேற்கொள்ளும் பொருட்டு ஒரு முகாமுக்கு ரூ. 5,000/- வீதம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் நிதியிலிருந்து மேற்கொள்ள செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. - 

10. மேற்காணும் பத்தி -5இல் உள்ள அட்டவணையின் வரிசை எண் 4இல் குறிப்பிட்டுள்ள, மாவட்டங்களில் ஏற்படும் சில்லரை செலவினங்களை மேற்கொள்வதற்கு, ரூ.2,26,678/-யை, ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மோமைத் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள முதல்வரின் முகவரித் துறை கூடுதல் தலைமைச் செயலர்/சிறப்பு அலுவவருக்கு(மு.கூ.பொ) அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. 

11. மேற்காணும் பத்தி-5இல் உள்ள அட்டவணையின் வரிசை எண்-5இல் குறிப்பிட்டுள்ள தொகை ரூ.1,00,000/-பை, ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ள முதல்வரின் முகவரித் துறை கூடுதல் தலைமைச் செயலர்/சிறப்பு அலுவலருக்கு(மு.கூ.பொ) அனுமதித்து அரசு ஆணையிடுகிறது. 

12. மேலும், மூன்றாம் கட்டமாக பத்தி-4இல் குறிப்பிட்டுள்ள 1270 "மக்களுடன் முதல்வர் முகாம்களை செவ்வனே நடத்துவது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure (SOP) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள். மேற்குறிப்பிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure (SOP) பின்பற்றி முகாம்களை நடத்த ஆணையிடப்படுகிறது. 

13. முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும் "மக்களுடன் முதல்வர்" இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். மேலும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முகாம்களில் பெறப்படும் மனுக்களை பரிசீலித்து உரிய சேவையினை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முகாம்களிவேயே பெரவேண்டும். "மக்களுடன் முதல்வர்" முகாம் நடத்த தேவையான உட்கட்டமைப்பு (இணைய வசதி உட்பட), பொது சேவைகளை வழங்கத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் முகாம் நடத்தப்படும் நாள் குறித்த விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் . உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

14. மேலும், இணைய வழி சேவை முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து முகாம்களிலும் இ- சேவை மையங்கள் அமைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். 

15. முகாம்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல், உரிய பாதுகாப்பு. சட்டம் ஒழுங்கு போன்றவற்றை எவ்வித குறைபாடின்றி செய்திட சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கும் அறிவுறுத்திட காவல்துறை தலைமை இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். 

16. "மக்களுடன் முதல்வர்" முகாம்களுக்கான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து. தீர்வு முறைகளை கண்காணிக்க முதல்வரின் முகவரித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்/ சிறப்பு அலுவலர் (மு.கூ.பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார். 

17. மேலே பத்தி 6-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தினை மேற்கொள்ள தேவையான கூடுதல் நிதியொதுக்கம் .45,33,560/-2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு/இறுதி திருந்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பினும், மேற்கண்ட செலவினம் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் ஒரு சிறப்பு நிகழ்வாக கொணர்ந்து சட்ட மன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். 

இந்நிதியொதுக்கம் செய்ய இருப்பதை எதிர்நோக்கி மேலே பத்தி 6-இல் ஒப்பளிக்கப்பட்ட தொகையினை முதல்வரின் முகவரித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்/சிறப்பு அலுவலர்(மு.கூ.பொ) அவர்களுக்கு பெற்று வழங்கிட பொது (பட்டியல்-அ)த் துறையின் பிரிவு அலுவலருக்கு, அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், பத்தி 6-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக்குறிப்பினையும் மற்றும் 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருந்த மதிப்பீடு/இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு தவறாது உரிய கருத்துருவையும் நிதி (பொது)த்துறைக்கு அனுப்பி வைக்குமாறு பொது (பல்வகை)த் துறையின் பிரிவு அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார் 


إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.