திருமூர்த்தி அணையிலிருந்து 10300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

0 MINNALKALVISEITHI
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை மூன்றாம் மண்டலப் பாசனப்பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு ஐந்து (5) சுற்றுகள் 29.01.2025 முதல் 13.06.2025 முடிய 135 நாட்களுக்குள் உரிய இடைவெளிவிட்டு 10300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. 

இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் என ஆக மொத்தம் 94362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 


إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.